டுகாட்டி நிறுவனமானது அப்டேட் செய்யப்பட்ட ஸ்கிராம்பிளர் ஃபுல் த்ராட்டில் பைக்கை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள டுகாட்டியின் 10 ஷோரூம்களிலும் இந்த பைக்கின் டெலிவரியும் தற்போதே தொடங்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த பைக்கில் 803 சிசி, L ட்வின் இன்ஜின், முன்பக்கம் 41 மில்லி மீட்டர் KYB USD ஃபோர்க்ஸ் சஸ்பென்ஷன் செட்டப்பும், பின்பக்கம் KYB ப்ரீலோடு அட்ஜஸ்டபிள் மோனோஷாக் சஸ்பென்ஷன் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது.
எக்ஸ் ஷோரூம் விலையில் 12 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.