TRF- லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் : காஷ்மீர் தாக்குதல்  சதி திட்டம் தீட்டியது யார்?
Sep 10, 2025, 06:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

TRF- லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் : காஷ்மீர் தாக்குதல்  சதி திட்டம் தீட்டியது யார்?

Web Desk by Web Desk
Apr 26, 2025, 06:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப் பட்ட பயங்கர வாத தாக்குதலுக்குப் பாகிஸ்தானைச் சேர்ந்த  லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான “தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்”  பொறுப்பேற்றுள்ளது.  அது பற்றிய விரிவாக இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப் பிரிவு, 2019 ஆம் ஆண்டு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்தது. அதே ஆண்டு, “தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்”  அமைப்பு உருவானது.

லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய தீவிரவாத அமைப்புக்கள், இஸ்லாமிய மத அடையாளங்களையும் கொள்கைகளையும் கொண்டிருந்தன. இதைப் பாகிஸ்தான் விரும்பவில்லை.

காஷ்மீரில் தான் நடத்தும்  தீவிரவாத செயல்களுக்கு மதச்சார்பற்ற இந்திய முகம் ஒன்று பாகிஸ்தானுக்குத் தேவைப்பட்டது. அதற்காகவே TRF உருவாக்கப்பட்டது.

தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்”   இந்தியாவில் தடை செய்யப் பட்டுள்ள  லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பாகும்.  சுதந்திரமான தனி காஷ்மீர் அடைவதே இந்த அமைப்பின் நோக்கமாக அறிவிக்கப்பட்டது.

முதலில், ஆன்லைன் அமைப்பாகத் தொடங்கப் பட்ட  “தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்” ஏற்கெனவே இயங்கி வந்த தீவிரவாத அமைப்புகளின் கூட்டமைப்பாக உருவெடுத்தது.

ஷேக் சஜ்ஜாத் குல் தலைமையில் உருவான இந்த அமைப்புக்கு,  தலைமை ஆபரேஷன் கமாண்டராக  பசித் அகமது தர் உள்ளார்.  ஆரம்பத்தில்   ஹிஸ்புல் முஜாஹிதீன் மற்றும் லஷ்கர்-இ-தொய்பாவின் தீவிரவாதிகளே இந்த அமைப்பில் இருந்தனர்.

தெஹ்ரீக்-இ-மில்லத் இஸ்லாமியா மற்றும் கஸ்னவி ஹிந்த் போன்ற அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகளைச் சேர்த்துக்கொண்டு ஒரு முழுமையான தீவிரவாத அமைப்பாக வளர்ந்தது. ஜம்மு காஷ்மீர் மக்களை இந்திய அரசுக்கு எதிராகத் தீவிரவாத அமைப்புகளில் சேரத் தூண்டுவதற்காக சமூக ஊடகங்களில் உளவியல் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது.

பாகிஸ்தானில் இருந்து ஜம்மு மற்றும் காஷ்மீருக்குள் ஊடுருவல், ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றிலும் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

TRF-ஐ ஒரு உள்நாட்டு எதிர்ப்புப் படையாக நிலைநிறுத்த அதன் தலைவர் ஷேக் சஜ்ஜாத் குல்லை செயல்பட்டு வந்துள்ளார்.  2021-ஆம் ஆண்டில்  ஜம்மு இந்திய விமானப்படை நிலையத்தில் நடந்த இரட்டை ட்ரோன் தாக்குதல்களுக்கும், ஜம்மு காஷ்மீரில், ட்ரோன்கள் மூலம்,  ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை வீசிய பல்வேறு தீவிரவாத தாக்குதல்களுக்கும் பின்னணியில் TRF  இருக்கிறது.

2022 ஆம் ஆண்டில்  ஜம்மு மற்றும் காஷ்மீரில் கொல்லப்பட்ட 172 தீவிரவாதிகளில், 108 பேர் “தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்” டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  இதனையடுத்து, 2023 ஆம் ஆண்டு ஜனவரியில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு  சட்டத்தின் (UAPA) கீழ், “தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்”  பயங்கரவாத அமைப்பாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டு ,தடை செய்யப் பட்டுள்ளது.  மேலும் அதன் தலைவர் ஷேக் சஜ்ஜாத் குல்லை  தேடப் படும்  தீவிரவாதியாக அறிவிக்கப் பட்டுள்ளார்.

மதச்சார்பற்ற இயக்கமாக ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் தன்னை முன்னிறுத்திக் கொண்டாலும், இதுவரை   TRF நடத்திய தாக்குதலில் பொதுமக்களைக் குறிப்பாகக் காஷ்மீர் இந்துக்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களைக் குறிவைத்தே தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்திய ராணுவம் மீதும், காஷ்மீரின் லோக்கல் அரசியல்வாதிகள் மீதும் இதே இயக்கம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்நிலையில், ஏப்ரல் 22 ஆம் தேதி, காஷ்மீரில் உள்ள பகல் ஹாமில் உள்ள  பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில், சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து TRF தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர்.

இந்த கொடூரமான தாக்குதலுக்கு, லஷ்கர் இ தொய்பாவின் தலைவராக உள்ள சைஃபுல்லா கசூரி என்ற காலித் சதித்திட்டம் தீட்டினார் என்று உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டு மாதங்களுக்கு முன்பு, காலித் பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள கங்கன்பூர் சென்றிருந்தார் என்றும் அங்குப் பாகிஸ்தான் ராணுவத்துடன் ஆலோசனை நடத்தினார் என்றும் கூறப்படுகிறது.

கடந்த பிப்ரவரி 2ம் தேதி, பாகிஸ்தானில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய காலித், இன்னும் ஓராண்டுக்குள்  காஷ்மீரைக் கைப்பற்றப்  போவதாகவும், பயங்கரவாத தாக்குதல்கள் தீவிரமாக்கப் படும் என்றும்  உறுதியளித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்தே, இப்போது, பகல் ஹாம் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான போரில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள இளைஞர்களுடன் சேர்ந்து லஷ்கர்-இ-தொய்பா மற்றும்  “தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்” தீவிரவாதிகள், காஷ்மீர் அல்லாத பிற மாநிலத்தவர்கள் மீது தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளனர் என்று  NIA விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags: TRF- The Shadow of Lashkar-e-Taiba: Who Planned the Kashmir Attack?TRF- லஷ்கர்-இ-தொய்பாதி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்
ShareTweetSendShare
Previous Post

பயங்கரவாதிகளுக்கு கடுமையாக தண்டனை வழங்க வேண்டும் – நடிகர் ரஜினிகாந்த்

Next Post

டாஸ்மாக் அலுவலக சோதனை வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

Related News

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

டெல்லி : ஷோரூமின் முதல் மாடியில் இருந்து புதிய கார் கீழே விழுந்து விபரீதம்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

இந்திய கடல்சார் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்!

ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!

மிடில் கிளாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

புதுக்கோட்டை : அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த இறால் பண்ணை உரிமையாளர்!

கொடைக்கானலில் உணவகம் மீது சரிந்து விழுந்த சுவர்!

வரும் 14ம் தேதி இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா!

புதிய ரூட்டில் தவெக தலைவர் விஜய் பிரச்சார பயணம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies