பெரம்பலூர் மாவட்டம் ஆலம்பாடி பகுதியில் மனித உருவத்தில் பிறந்த ஆட்டுக் குட்டியைப் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.
ஆலம்பாடி பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவருக்குச் சொந்தமான ஆடு ஒன்று ஈன்ற குட்டியின் தலை, மனித தலை போன்று இருந்தது.
இந்த தகவல் அப்பகுதியில் வேகமாகப் பரவியதால் ஆட்டுக் குட்டியைப் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். பிறக்கும்போது உயிருடன் இருந்த குட்டி, சுமார் 30 நிமிடங்களில் உயிரிழந்தது.