இந்தியாவுடனான அனைத்து வகை வர்த்தகங்களையும் நிறுத்த பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
மேலும், பாகிஸ்தானின் வான்வெளியைப் பயன்படுத்த இந்திய விமானங்களுக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவுடன் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் உரிமையைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளதுடன், அந்நாட்டில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை 30- ஆக குறைக்கவும் பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.
அத்துடன் இந்தியாவுக்கு சார்க் நாடுகள் விசா வழங்குவதையும் நிறுத்த பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.