கனியாமூர் தனியார் பள்ளி கலவர வழக்கு தொடர்பான விசாரணை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு கனியாமூர் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி உயிரிழந்ததற்கு நியாயம் கேட்டு நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இது தொடர்பான வழக்கு கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மீண்டும் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது 2 பெண்கள் உட்பட 121 பேர் ஆஜரானர். இதனைதொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை மே 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.