கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கட்டட தொழிலாளியை கொடூரமாக தாக்கிய சம்பவத்தில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கட்டட தொழிலாளி வீர சுந்தரத்திற்கும், அவரது சகோதரர் வீரப்பனுக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், வேலைக்கு சென்ற வீர சுந்தரத்தை மது போதையில் வழிமறித்த வீரப்பன் உள்ளிட்ட 3 பேர், அவரை இரும்பு ராடு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார், அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வீரப்பன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தங்கமணி என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.