திருப்பத்தூர் மாவட்டம், இருணப்பட்டு அருகே பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இருணப்பட்டு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கும், அவரது மனைவி சிலம்பரசிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சிலம்பரசி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.