சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை மற்றும் வஸ்திரங்கள் வழங்கும் வைபவம் விமரிசையாக நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் கோயில் சித்திரை தேரோட்டத்தின்போது ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை மற்றும் வஸ்திரங்களை அணிந்து ரெங்கநாதர் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம். இந்த நடைமுறை இடையில் நின்றுபோன நிலையில், இரு ஊர் பக்தர்களின் முயற்சியால் மீண்டும் நடைமுறைக்கு வந்தது.
அதன்படி, ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை மற்றும் வஸ்திரங்கள் வழங்கும் வைபவம் விமரிசையாக நடைபெற்றது. ஆண்டாள் கோயிலில் இருந்து எடுத்து வரப்பட்ட மாலை, பட்டு வஸ்திரங்கள், மலர்கள், இலைகளால் செய்யப்பட்ட கிளிகள் உள்ளிட்ட மங்களப்பொருட்கள் ரெங்கவிலாச மண்டபத்தில் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன.
பின்னர், அவை யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வஸ்திர மரியாதையை ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகிகள் ஏற்றுக் கொண்டனர்.