பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசாங்கமே காரணம் என்று அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாகத் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள கனேரியா, இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு உண்மையிலேயே எந்தப் பங்கும் இல்லை என்றால், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஏன் இன்னும் அதைக் கண்டிக்கவில்லை? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாகிஸ்தான் அரசு பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வளர்க்கிறது எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இதன் காரணமாகவே பாகிஸ்தான் படைகள் தற்போது அதிக எச்சரிக்கையுடன் உள்ளன எனவும் டேனிஸ் கனேரியா கூறியுள்ளார்.