அரக்கோணம் அருகே தண்டவாளத்தின் இணைப்புப் பகுதியில் போல்டுகள் அகற்றப்பட்டிருந்தது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருவள்ளுர் மாவட்டம் திருவாலங்காடு ரயில் நிலையத்தில் தண்டவாள இணைப்புகளில் இருந்த போல்டுகள் கழற்றப்பட்டு கிடந்துள்ளன. அதிர்ஷ்டவசமாக சிக்னல் துண்டிக்கப்பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்தனர். ரயிலை கவிழ்க்க சதி நடைபெற்றதா என்பது குறித்து அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.