தேவையான நிதியை ஒதுக்கி மீனவர்களுக்கான அனைத்து திட்டங்களும் குறிப்பிட்ட காலத்துக்குள் செய்து தரப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி உறுதியளித்துள்ளார்.
தேங்காய் திட்டு துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு 60 சதவீத மானிய விலையில், மீனவர்களுக்கு மீன்பிடி வலை மற்றும் கயிறு வழங்கினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், மீனவர்கள் நலனில் அரசு மிகுந்த அக்கறை கொண்டு பல்வேறு நலத்திட்டங்களைச் செய்து வருவதாகத் தெரிவித்தார்.