பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவும், பாகிஸ்தானும் அதிகபட்ச நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என ஐநா பொதுச்செயலாளருக்கான செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.
ஐநா சபையில் பேசிய அவர், பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ஐநா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நிலைமையை மிக நெருக்கமாகவும் மிகுந்த கவலையுடனும் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கவும், நிலைமை மோசமடையாமல் பார்த்த கொள்ளவும் இருநாடுகளுக்கு குட்டரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளதாக ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.