திமுக அரசு மக்களின் நம்பிக்கையை இழந்து கொண்டிருப்பதாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் கோடை வெயிலின் தாக்கத்தைக் குறைக்கும் விதமாக பாஜக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலைத் திறந்து வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அரசியல் மாற்றத்திற்கான வேலைகள் அனைத்தும் தீவிரமாக நடந்து வருவதாகவும், திமுக அரசு மக்களின் நம்பிக்கையை இழந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், தமிழக அமைச்சர்கள் மீதான குற்ற வழக்குகளைச் சுட்டிக்காட்டிப் பேசிய வானதி சீனிவாசன், முதலமைச்சர் ஸ்டாலின் இன்னும் ஏன் அவர்களைப் பதவியில் வைத்துள்ளார் எனவும் கேள்வி எழுப்பினார்.