பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தில் காப்புரிமையை மீறிப் பாடலை பயன்படுத்தியதாக 2 கோடி ரூபாய் செலுத்த ஏ.ஆர்.ரகுமானுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தில் வீரா ராஜ வீர பாடல் இடம் பெற்றிருந்தது.
இந்த பாடல் தனது தாத்தா மற்றும் தந்தை ஆகியோர் இயற்றிய சிவ ஸ்துதி பாடல் எனக்கூறி இழப்பீடு தொகை வழங்க வேண்டுமென ஃபயாஸ் வாசிஃபுதீன் தாகர், டெல்லி உயர்நீதிமன்றத்தில் பதிப்புரிமை மீறல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையில் ஆஜரான ஏ.ஆர்.ரகுமான் தரப்பு, சிவ ஸ்துதி பாடலால் ஈர்க்கப்பட்டு அதன் உந்துதலால் பாடலை இயற்றியதாகத் தெரிவித்தது.
இதையடுத்து 2 கோடி ரூபாயை டெல்லி உயர்நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த ஏ.ஆர்.ரகுமானுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.