பஹல்காம் தாக்குதல் நடைபெற்ற இந்த துயரமான நேரத்தில் இந்தியாவுடனும் அதன் மக்களுடனும் உறுதியாக நிற்பதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், தேவைப்படும் இடங்களில் பிரான்ஸ், அதன் நட்பு நாடுகளுடன் சேர்ந்து, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தைத் தொடரும் எனத் தெரிவித்தார்.
பிரான்சின் ஒற்றுமை மற்றும் நட்பை நம்பலாம் என குறிப்பிட்டுள்ள இமானுவேல் மேக்ரான், பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் எதிர்த்துப் போராடுவதில் தாங்கள் எப்போதும் ஒற்றுமையாக இருந்துள்ளோம் எனவும் கூறியுள்ளார்.