ராமேஸ்வரத்தில் தங்கையிடம் தவறாக நடக்க முயன்ற நண்பனைக் கொலை செய்து வீட்டில் புதைத்த சகோதரரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பெரிய பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த நம்புராஜன், மீன்பிடி கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
இவரைக் கடந்த 30-ம் தேதி முதல் காணவில்லை என குடும்பத்தார் புகார் அளித்த நிலையில், அதுகுறித்து ராமேஸ்வரம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் நம்புராஜன் கடைசியாகத் தனது நண்பரான வெங்கடேசனுடன் சேர்ந்து மது அருந்தியது தெரியவந்ததால் அவரை பிடித்து போலீசார் விசாரணையைத் தொடர்ந்தனர்.
அப்போது மது போதையில் தனது தங்கையிடம் தவறாக நடக்க முயன்ற நம்புராஜனை, தான் கொலை செய்து வீட்டில் புதைத்ததாக வெங்கடேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதனடிப்படையில் அவரை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே வெங்கடேஷ் அளித்த தகவலின் பேரில் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து நம்புராஜனின் உடலை தோண்டி எடுத்த போலீசார், மருத்துவர்களை வரவழைத்து பிரேதப் பரிசோதனையை முடித்து உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.