சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியை காண நடிகர் அஜித்குமார் குடும்பத்துடன் கண்டுகளித்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் – ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தைக் காண நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் வருகை தந்தனர்.
யாரும் எதிர்பாராத நேரத்தில் அஜித் தனது குடும்பத்துடன் வருகை தந்தது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.