சிக்கிம் நிலச்சரிவால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
தொடர் கனமழை காரணமாக சிக்கிமின் லாச்சென் மற்றும் லாச்சுங் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில சுற்றுலா சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஊர் திரும்ப முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர்.
அவர்கள் அனைவரும் அருகில் உள்ள கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் அவர்களை மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.