பாகிஸ்தானில் ராணுவ வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்.
குவெட்டாவின் புறநகர்ப் பகுதியில் ராணுவத்தினர் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ரிமேட் கண்ட்ரோல் மூலம் ஒரு வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், பாகிஸ்தான் ராணுவ சேர்ந்த 10 பேர் மரணம் அடைந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு பலூசிஸ்தான் விடுதலைப் படை பொறுப்பேற்றுள்ளது. இதுதொடர்பான வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.