இஸ்ரோவின் முன்னாள் தலைவர் டாக்டர் கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், இஸ்ரோவின் முன்னாள் தலைவரும் தேசிய கல்விக் கொள்கை 2020 இன் வடிவமைப்புக் குழுவின் தலைவருமான டாக்டர் கஸ்தூரி ரங்கன் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார்.
விஞ்ஞானியாக நம் தாய்நாட்டிற்கு அவர் ஆற்றிய சேவை அளப்பரியது. அவரது பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்தித்துக் கொள்கிறேன் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.