தென்காசி அருகே 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வருவாய் உதவியாளர் லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் தெற்குசத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் காளிராஜன் என்பவர், புளியங்குடியில் புதிதாக கட்டியுள்ள வீட்டிற்கு குடிநீர் இணைப்பு பெற காலிமனை தீர்வை ரசீது கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
15 ஆயிரம் ரூபாய் கொடுத்தால்தான் காலிமனை தீர்வை ரசீது வழங்க முடியும் என புளியங்குடி நகராட்சி வருவாய் உதவியாளர் அகமது உமர் கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத காளிராஜன், மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் அளித்த அறிவுரையின்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை வருவாய் உதவியாளரிடம் கொடுத்துள்ளார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் வருவாய் உதவியாளர் கையும் களவுமாக பிடிபட்டார்.