குஜராத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 550-க்கும் மேற்பட்டோரை அகமதாபாத் குற்றப்பிரிவு போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்து பல ஆண்டுகளாக போலி ஆவணங்களுடன் அகமதாபாத் மற்றும் சூரத் உள்ளிட்ட நகரங்களில் ஏராளமானோர் வசித்து வருவதாக அகமதாபாத் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில், அகமதாபாத், சூரத் உள்ளிட்ட நகரங்களில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் உட்பட 550 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணைக்குப் பிறகு அனைவரும் சொந்த நாட்டிற்கு அனுப்பப்படுவார்கள் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.