திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே ஆகாச ராயர் கோயில் குதிரை எடுப்பு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
சின்னக்கருணை பாளையத்தில் இருந்து அவிநாசி மங்கலம் சாலையில் உள்ள ஆகாசராயர் கோயிலுக்குக் குதிரை ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டது.
அப்போது வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கவுண்டன்பாளையம், காசிகவுண்டன் புதூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக ஆகாசராயரின் குதிரை வரப்பட்டு கோயிலில் வைக்கப்பட்டது.