முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் பஹல்காம் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசியுள்ள அவர், குற்றவாளிகள் அனைவருக்கும், அவர்களை ஆதரித்த அனைவருக்கும், அவர்களைக் கையாண்ட அனைவருக்கும் தான் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புவதாகக் கூறினார்.
இந்த சண்டை எல்லாம் என்ன சாதித்தது? எனவும் கடந்த 78 ஆண்டுகளாக, ஒரு மில்லிமீட்டர் நிலம் கூட கைமாறவில்லை இல்லையா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஆகையால் நாம் ஏன் அமைதியாக வாழ்ந்து, நம் நாட்டை வலிமையாக்கக் கூடாது? அதுதான் எனது வேண்டுகோள் எனவும் கவாஸ்கர் தெரிவித்தார்.