பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சுமார் ஐந்து கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது.
உண்டியல்கள் நிறைந்ததைத் தொடர்ந்து காணிக்கைகள் எண்ணப்பட்டன. 5 கோடியே 42 லட்சத்து 62 ஆயிரத்து 88 ரூபாய் ரொக்கமும், ஒரு கிலோ தங்கமும், 21 ஆயிரத்து 324 கிராம் வெள்ளியும் காணிக்கையாகக் கிடைத்துள்ளதாகக் கோயில் நிர்வாகம் கூறியுள்ளது.
மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகளும் காணிக்கையாகச் செலுத்தப்பட்டுள்ளன.