அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரும் 2028-ம் ஆண்டு தேர்தலிலும் போட்டியிடுவார் என்பதைக் குறிக்கும் வகையிலான பொருட்களை அவரது ஆன்லைன் ஸ்டோரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் டிரம்ப் அமெரிக்க அதிபராக 2-வது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அமெரிக்க சட்டப்படி ஒருவர் இரு முறைக்கு மேலாக அதிபராகப் பதவி வகிக்க முடியாது.
இந்நிலையில் தற்போது விற்பனையாகும் டிரம்ப் – 2028 என அச்சிடப்பட்ட பொருட்களால், சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.