சிவகாசி அருகே எம் புதுப்பட்டி பகுதியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3பேர் உயிரிழந்தனர்.
சிவகாசி அருகே எம் புதுப்பட்டி பகுதியில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். வழக்கம் போல பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்ட போது ரசாயன கலவையில் ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் நிகழ்விடத்திலேயே மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சென்ற சிவகாசி தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.