திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சிசிடிவி கேமராவை சேதப்படுத்தி காரை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சிக்கர்னாப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ராஜா அதே பகுதியில் தேங்காய் மண்டி நடத்தி வருகிறார்.
இந்நிலையில், நேற்று தேங்காய் மண்டி உள்ளே புகுந்த மர்ம நபர்கள் சிசிடிவி கேமராவை சேதப்படுத்தி, அங்கிருந்த காரை திருடிச் சென்றுள்ளனர்.
ராஜா அளித்த புகாரின்பேரில் அம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.