பயங்கரவாதத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி தெரிவிதுள்ளார்.
கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாகிஸ்தானுடனான உறவுகளை முறித்துக் கொள்ள வேண்டும் என்றும், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கங்குலி வலியுறுத்தினார். மேலும் பயங்கரவாத செயலை பொறுத்துக்கொளள்ள முடியாது எனவும் கூறினார்.