மதுரையில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் சிகிச்சை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் பாலமுருகன், வீட்டின் மொட்டை மாடியில் உறங்கிக் கொண்டிருந்தபோது பூனை கடித்ததில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டார்.
சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள ரேபிஸ் வார்டில் தனி அறையில் அனுமதிக்கப்பட்ட அவர், கடும் வலி மற்றும் மன உளைச்சல் காரணமாகப் போர்வையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.