தஞ்சாவூர் மாவட்டம் திருவிசைநல்லூரில் தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவிடைமருதூர் அருகே திருவிசைநல்லூர் சாலையில் தனியார் வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் உள்ளது.
ஏடிஎம் மையத்திற்கு இன்று காலை வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க சென்றபோது இயந்திரம் உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து காவல் நிலையத்திற்கும், வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தனர். இதையடுத்து சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது அடையாளம் தெரியாத நபர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த நிலையில், அதிலிருந்து பணத்தை எடுக்க முடியாததால் மர்ம நபர் திரும்பிச் சென்றதும் தெரியவந்தது.