மயிலாடுதுறையில் மின் கம்பத்தைப் பிடித்த 15 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலையூர் கிராமத்தில் உள்ள உத்திராபதியார் கோயில் திருவிழாவை முன்னிட்டு அங்குள்ள மின் கம்பத்தில் போக்கஸ் லைட் கட்டப்பட்டிருந்தது.
போக்கஸ் லைட்டில் மின் கசிவு ஏற்பட்டு மின் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்நிலையில், எதிர்பாராத விதமாக மின் கம்பத்தைப் பிடித்த 10-ம் வகுப்பு மாணவனான தமிழ்துரையை மின்சாரம் தாக்கியதில், தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.