முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மீதான கொலை முயற்சி வழக்கை ரத்து செய்யச் சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், கள்ள ஓட்டுப் போட முயன்ற திமுக உறுப்பினரைத் தாக்கியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் உட்பட 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது
இதையடுத்து, தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை ரத்து செய்ய நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.
பின்னர் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.