திருப்பத்தூர் அருகேயுள்ள இரணியூர் கடப்பான் கண்மாயில் ஊத்தா கூடை மீன்பிடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
இதில் புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இதனிடையே விழாவில் பங்கேற்கக் கட்டணம் வசூலிக்கப்பட்ட பின்னர், ஊத்தா கூடை வழங்கப்பட்டது.
விழா தொடங்கியதும் இளைஞர்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் ஊத்தாவுடன் போட்டிப் போட்டுக் கொண்டு கண்மாய்க்குள் இறங்கி மீன்களைப் பிடித்தனர்.
கட்லா, விராமீன், கெண்டை உள்ளிட்ட மீன்கள் கிடைத்ததால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.