சேலம் பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தர் ஜெகநாதன் முறைகேடு வழக்கு விசாரணைக்காக சூரமங்கலம் காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் ஆஜரானார்.
விதிகளை மீறி அனுமதி பெறாமல் பல்கலைக் கழக தொழில்நுட்ப தொழில் முனைவோர் மற்றும் ஆராய்ச்சி அமைப்பைத் தொடங்கியதாகத் துணைவேந்தர் ஜெகநாதன் உள்ளிட்டோர் மீது புகார் எழுந்தது.
இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தக்கோரி பல்கலைக் கழக ஊழியர் சங்கத்தினர் கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுதொடர்பான விசாரணைக்காகத் துணைவேந்தர் ஜெகநாதன் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். இதனால் உதகையில் நடந்த துணைவேந்தர்கள் மாநாட்டில் அவர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.