தீவிரவாதிகளின் தொழிற்சாலையாக உள்ள பாகிஸ்தான் மீது உலக நாடுகள் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமெனச் சேவா பாரதி தென்தமிழ்நாடு மாநில பொது செயலாளர் ஸ்ரீதர மூர்த்தி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் சேவா பாரதி தென்தமிழ்நாடு குமரி மேற்கு மாவட்ட பிரதிநிதிகள் சங்கம மாநாடு நடைபெற்றது. இதில் சேவா பாரதி தென்தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் ஸ்ரீதர மூர்த்தி, மாவட்ட தலைவர் ராஜேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்ரீதர மூர்த்தி, பஹல்காம் தாக்குதல் ஒட்டுமொத்த பாரதத்தையும் கண்கலங்க செய்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும் தீவிரவாதிகளின் தொழிற்சாலையாக உள்ள பாகிஸ்தான் மீது உலக நாடுகள் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.