தக் லைப் படத்தின் இரண்டாவது பாடல் அடுத்த மாதம் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தக் லைப். இப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதன் முதல் பாடலான ஜிங்குச்சா வெளியாகி மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், இரண்டாவது பாடல் அடுத்த மாதம் 7-ம் தேதி வெளியாகுமென கூறப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.