கள்ளக்குறிச்சி அருகே 100 டன் முலாம் பழங்கள் நிலத்திலேயே அழுகி வீணான ட்ரோன் காட்சி வெளியாகி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கோடை காலத்தில் முலாம் பழங்கள் பயிரிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். நடப்பாண்டும் 5 ஏக்கர் விளைநிலத்தில் 4 லட்சம் ரூபாய் செலவு செய்து முலாம் பழங்களை விவசாயிகள் பயிரிட்டனர். 100 டன் முலாம் பழங்களை கொள்முதல் செய்வதாக தனியார் நிறுவனம் ஒப்பந்தம் செய்த நிலையில், கூறியபடி பழங்களை கொள்முதல் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் முலாம் பழங்கள் நிலத்திலேயே அழுகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். விளைச்சல் அதிகம் இருந்தும் பழங்களை விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் உள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், 100 டன் முலாம் பழங்கள் நிலத்திலேயே அழுகிக் கிடக்கும் ட்ரோன் காட்சி வெளியாகி உள்ளது.