நீண்ட தொலைவுள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை இந்திய கடற்படை மூலம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
அண்டை நாடான பாகிஸ்தானுடன் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இந்திய பாதுகாப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்திய கடற்படை சார்பில் நீண்ட தொலைவுள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
அரபிக் கடலில் நிறுத்தப்பட்டுள்ள போர் கப்பலில் இருந்து சீறிப்பாய்ந்த ஏவுகணை, திட்டமிட்ட இலக்கை தாக்கி அழித்த நிலையில், இந்திய கடற்படை வீரர்களும், தொழில்நுட்ப குழுவினரும் 100 சதவீதம் தயார் நிலையில் இருப்பதாக பாதுகாப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.