தென்காசி மாவட்டம் கடையம் அருகே இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் மனைவி உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாலாங்கட்டளை கிராமத்தில் வீடு புகுந்து ஆமோஸ் என்பவரை மர்ம நபர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆமோஸ் மனைவி நந்தினியிடம் போலீசார் துருவி துருவி விசாரணை செய்ததில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
தகாத உறவுக்கு கணவர் ஆமோஸ் இடையூறாக இருந்ததால், அந்தோணி டேனிஸ் என்பவர், ஆமோஸை வெட்டிக் படுகொலை செய்ததாக நந்தினி ஒப்பு கொண்டார். இதனையடுத்து 2 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.