திருமாவளவன், சீமான் ஆகியோர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், பாகிஸ்தானுக்குச் சரியான பாடம் புகட்டப்படும் என மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆன்மிக கருத்தரங்கில் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருமாவளவன் பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனக் கூறினால் வாக்கு வங்கி பலப்படும் என நினைப்பதாகக் கூறினார்.
வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாத பாகிஸ்தானுக்கு, திருமாவளவன் மற்றும் சீமான் ஆகியோர் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் சரியான பாடம் புகட்டப்படும் எனவும் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும், துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாகத் தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் மோதல் போக்கு ஏற்படாமல் சட்டவல்லுனர்கள் மூலம் தீர்வு காண்பதே எதிர்காலத்தில் நன்மை தரும் எனவும் அவர் கூறினார்.