திருப்பூர் கோல்டன் நகர் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததை வேடிக்கை பார்த்தாக கூறி வடமாநில இளைஞர்களைத் தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொட்டி பாளையம் பகுதியைச் சேர்ந்த 3 பேர் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளனர்.
அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த வடமாநிலங்களைச் சேர்ந்த 3 பேர் கீழே விழுந்ததை வேடிக்கை பார்த்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த 3 பேரும் வடமாநில இளைஞர்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில், காயமடைந்த வடமாநில இளைஞர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.