திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே அரிவாளுடன் ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
ஆரணி அருகே நெசல் கிராமத்தை சேர்ந்த ஐடிஐ மாணவரான நேமிகுமார் என்பவர் சில தினங்களுக்கு முன்பு அரிவாளுடன் இருக்கும் ரீல்ஸ் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ வைரலான நிலையில், நேமிகுமாரை போலீசார் கைது செய்தனர். மேலும், இளைஞரை ஆரணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர்.