செங்கல்பட்டு அருகே செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபாவுக்குச் சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இளைஞர் உயிரிழந்தார்.
வசுவசமுத்திரத்தை சேர்ந்த குணசேகரன் என்பவர், உறவினரின் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியை மிதித்ததில் குணசேகரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட விவசாய நிலம் செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபாவுக்குச் சொந்தமானது என்பதும், காட்டுப்பன்றிகளின் தொல்லைக்காக மின்வேலி அமைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.
மின்வேலி அமைத்த எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.