இந்தோனேசியாவில் 2 வாரங்களுக்கு முன்பு வெடித்த எரிமலை, கரும்புகை மற்றும் சாம்பலை வெளியேற்றி வருகிறது.
நுசா தெங்காரா மாகாணத்தில் லெவோடோபி லகி லகி எரிமலை உள்ளது. அந்த எரிமலை இருக்கும் மாகாணத்தில் கடந்த சில காலமாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அந்த எரிமலையின் செயல்பாடு அதிகரித்துக் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், எரிமலை 2 வாரங்களுக்கு முன்பு வெடித்தது. ஆனால் தற்போது வரை கரும்புகை மற்றும் சாம்பலை வெளியேற்றி வருவதால் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.