போதைப்பொருள் வழக்கில் 2 மலையாள திரைப்பட இயக்குநர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கேரள சினிமா உலகம் கடந்த சில நாட்களாக நடிகைகள் பாலியல் தொல்லை, போதைப் பொருள் விவகாரம் போன்றவற்றால் பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது.
இந்த நிலையில், இயக்குநர்கள் காலித் ரகுமான் மற்றும் அஷ்ரப் ஹம்சா ஆகியோர் கொச்சியில் உள்ள ஒளிப்பதிவாளர் சமீர் தாஹிர் என்பவருக்குச் சொந்தமான வீட்டில் கதை விவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குச் சென்று சோதனை நடத்திய போலீசார், போதைப்பொருள் இருப்பதைக் கண்டறிந்து இயக்குநர்கள் 2 பேர் உட்பட மூவரைக் கைது செய்தனர்.