மதுரையில் வெயிலின் தாக்கத்தால் தூய்மை பணியாளர் மயங்கி விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், மதுரையில் சில நாட்களாகவே வெப்பம் 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது.
இந்த நிலையில், நாராயணபுரத்தை சேர்ந்த ஒப்பந்த தூய்மை பணியாளரான மணிவேல், கடும் வெப்பத்தால் மயங்கி விழுந்தார்.
அப்போது அவரது தலையில் பலத்த காயம் ஏறப்பட்டதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே மணிவேல் பரிதாபமாக உயிரிழந்தார்.