சித்திரைத் திருவிழாவையொட்டி சேலம் மணியனூர் காளியம்மன் சாத்தப்பட்ட புடவைகள் கோயில் வளாகத்தில் கோவில் நிர்வாகம் சார்பாக ஏலம் விடப்பட்டது.
அம்மன் மீது சாத்தப்பட்ட புடவைகளை ஏலம் எடுக்க அதிக அளவில் பெண்கள் ஆர்வம் காட்டினர். அம்மன் மீது சாத்தப்பட்ட புடவைகளை வாங்கி வீட்டில் வைத்தால் அனைத்துவிதமான செல்வச் செழிப்புகளைப் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
ஏலம் விடப்பட்ட புடவைகளைப் பெண் பக்தர்கள் ஆர்வமுடன் ஏலம் கேட்டு வாங்கிச் சென்றனர். நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் கோயில் நிர்வாகம் சார்பில் விலையுயர்ந்த புடவைகளும் குறைந்த விலைக்கு ஏலம் விடப்பட்டன.