கனடாவின் வான்கூவா் நகரில் பிலிப்பின்ஸ் சமூகத்தினரின் பாரம்பரிய மற்றும் கலாசார விழாவுக்காகத் தெருவில் கூடியிருந்த மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த காா் மோதியதில் 11 போ் உயிரிழந்தனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஸ்பெயின் காலனி ஆதிக்கத்தை எதிர்த்த லாப்பு என்ற தளபதியின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக, கனடா நாட்டின் வான்கூவர் நகரில் விழா நடைபெற்றது. இதில், கனடாவில் வசிக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டினர் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இசை, நடனம், உணவு என கலாசாரத்திருவிழா களைகட்டியிருந்தது. அப்போது கூட்டத்திற்குள் அதிவேகமாக வந்த கார் ஒன்று புகுந்ததில் விழாவில் பங்கேற்ற 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
















