அரியலூரில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் பூச்சொரிதல் விழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.
குறிஞ்சான் ஏரிக்கரையில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயிலில், நாட்டில் மழை பெய்ய வேண்டியும் மக்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டியும் பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த விழாவில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கூடைகளில் பூக்களை ஏந்தியவாறு நகரின் முக்கிய வீதியில் ஊர்வலமாக வந்து சிவபெருமானுக்கு மலர்களைத் தூவி சிறப்பு வழிபாடு நடத்தினர். இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.